சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வு நடைபெறுமா, இல்லையா என தெளிவுபடுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளார்கள் என்றும் கூறினார்.
தற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், 'பிரதமர் மோடியை நேரில் சந்தித்த போது நீட் தேர்வு வேண்டாம் என 4,5 முறை வலியுறுத்தினேன். 2010-ல் விரும்புகின்ற மாநிலங்கள் மட்டும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்ற நிலைமை இருந்தது. தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் நீட் கட்டாயம் என்ற நிலை உருவாகியுள்ளது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற போராடுவோம்; வெற்றி பெறுவோம். அதிமுகவும் துணை நிற்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. நீதிபதி ராஜன் தலைமையிலான குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் சட்ட ரீதியான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்' என்றார்.
இதனையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக நிச்சயம் துணைநிற்கும் என்று உறுதி அளித்தார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.