தண்ணீர் குடிப்பது உடலுக்கு அதிகம் நன்மை தரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
பொதுவாக, நம் உடலுக்குத் தண்ணீர் தேவையெனில், தாகம் எடுத்து நம்மிடம் கேட்கும். அப்போது குடித்தால் போதுமானது. லிட்டர் லிட்டராக குடிக்கத் தேவையில்லை.
தாகமே எடுப்பதில்லை என்பவர்களுக்கு, கபம் அதிகமாகிறது என்று அர்த்தம். அதேபோல, அதிக தாகம் எடுப்பவர்களுக்கு பித்தம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.
உடல் தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால், செரிமானப் பிரச்னை நிச்சயம் வரும். காரணம், வயிற்றில் செரிமானம் நடப்பது அக்னியால்.
அதிகமான தண்ணீர் அந்த அக்னியை அணைக்கும்போது, அது தடைப்படும்.
தாகம் எடுத்தும் தண்ணீர் அருந்தாமல் தவிர்க்கிறவர்களுக்கு, நீர்ச்சத்துக் குறைந்து, சரும வறட்சி, சுருக்கம், முடி உதிர்வு, கருவளையம், காலில் வெடிப்பு போன்றவை ஏற்படும்.
காலையில் எழுந்ததும் ஒரு குவளை தண்ணீர் குடித்த பின்னரே காலைக் கடமைகளை முடிக்கப் பழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு, அவர்களின் உடலில் கழிவை வெளியேற்றும் வாயு உற்பத்தி நின்றுவிட்டது என்று அர்த்தம்.
தானாக நடக்க வேண்டிய விஷயத்தை தண்ணீர் குடித்துதான் தூண்ட வேண்டும் என்றால், உடலில் பிரச்னை என்றே அர்த்தம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.