பிளஸ்டூ தேர்வு குறித்த முடிவை முதல்வர் அறிவிப்பார்: மகேஷ் பேட்டி
பிளஸ்டூ தேர்வு குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்ட பின் முடிவை முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ளதால், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்து, பிரதமர் மோடி அறிவித்தார். மாநிலங்களை பொறுத்த வரையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து, அந்தந்த மாநிலங்களே முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டது.
தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பிரதிநிதிகள் போன்றோர், மாவட்ட ரீதியாக தங்கள் கருத்துக்களை, பள்ளி கல்வி அதிகாரிகளிடம் வழங்கி வருகின்றனர்.
முதல்வர் முடிவை அறிவிப்பார்
இந்நிலையில் இன்று மாவட்ட கல்வி அலுவலர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின் பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,பிளஸ்டூ தேர்வு குறித்து கல்வியாளர்கள், பெற்றோர் , பொதுமக்களிடமிருந்து கருத்துகள் வந்துள்ளன. இது தொடர்பாக மற்ற மாநிலங்கள் எடுத்துள்ள முடிவையும் கவனித்து வருகிறோம். தேர்வு நடத்துவது குறித்து . சட்டமன்ற அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை நடத்திய பின்னர் மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை கேட்கப்பட உள்ளது. அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் அடிப்படையில் முதல்வர் முடிவை அறிவிப்பார். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.