வெள்ளை சர்க்கரையை விட, சுத்திகரிக்காத, பட்டை தீட்டப்படாத பிரவுன் ஷூகர் எனப்படும் நாட்டு சர்க்கரை மிகவும் நல்லது என்று பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். சர்க்கரை, பிரவுன் சர்க்கரை இரண்டுமே கரும்பு சாற்றில் இருந்து தயாரிக்கப்படுவதுதான்.
கரும்புச் சாற்றைக் கொதிக்க வைத்து, மூன்றில் ஒரு பங்காக காய வைத்து பிறகு குளிர்விக்கும் போது பழுப்பு நிறத்தில் வெல்லம் பாகு கிடைக்கிறது. இந்த பாகை சுத்தப்படுத்தி சர்க்கரையாக மாற்றுகின்றனர். இந்த செயல்பாட்டில் மிக அதிக அளவில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
இரண்டு சர்க்கரைகளுமே சுவையானவைதான். சுவையைப் பொருத்த வரை எந்த மாற்றமும் இல்லை. பிரவுன் சர்க்கரையில் மொலாசிஸ் மற்றும் தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.
குறிப்பாக பிரவுன் சர்க்கரையில் கால்சியம், பொட்டாசியம், மக்னீஷியம், இரும்புச் சத்து உள்ளது. அதே நேரத்தில் வெள்ளை சர்க்கரையில் இந்த தாது உப்புக்கள் எல்லாம் வெளியேற்றப்படுகின்றன. இதனால், வெள்ளை சர்க்கரையைக் காட்டிலும் பிரவுன் சர்க்கரையில் ஊட்டச்சத்து சற்று அதிகம் உள்ளது.
அதே நேரத்தில் கலோரி அளவைப் பொருத்தவரை இரண்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. வெள்ளை சர்க்கரை சுத்தமான கார்போஹைட்ரேட். இது உடலில் கலோரியை அதிகரிக்க செய்து கொழுப்பாக மாற்றப்பட்டுச் சேகரிக்கப்படுகிறது.
ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் (தோராயமாக 4 கிராம்) 16 கலோரி இருக்கும். அதுவே பிரவுன் சர்க்கரையில் 14-15 கலோரி என்ற அளவில் இருக்கும். எனவே, வெள்ளை சர்க்கரையை சேர்ப்பதைக் காட்டிலும் பிரவுன் சர்க்கரை சேர்ப்பதால் கலோரி குறைவு என்று கருதிவிட வேண்டாம்.
பழுப்பு சர்க்கரையை விட நாட்டு சர்க்கரை மிகவும் நல்லது. தென்னை மற்றும் பனை மரத்திலிருந்து இறக்கப்படும் பதநீரைக் கொண்டு இந்த சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. இந்த செயல்முறையில் ரசாயனங்கள் சேர்க்கப்படுவது இல்லை என்பதால் ஆரோக்கியமான சர்க்கரையாக இது பார்க்கப்படுகிறது. இதன் கிளைசெமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு. இதனால் ரத்தத்தில் உடனடியாக சர்க்கரை அளவை இது அதிகரிக்கச் செய்யாது.
நாட்டு சர்க்கரையில் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்பு, தாமிரம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இன்சுலின் எதிர்ப்புத் திறன் பிரச்னை மற்றும் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை இது குறைக்கும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.