மக்களை அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் கரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ள விடியோவில் தெரிவித்துள்ளதாவது,
மக்கள் கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடித்தால் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
கரோனாவால் அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. அதற்காக மாதம் 2 ஆயிரம் வீதம் இரு மாதங்களுக்கு 4 ஆயிரம் வழங்கப்படுகிறது. 13 பொருள்கள் அடங்கிய தொகுப்பும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதனை இப்படி நீட்டித்துக்கொண்டிருக்க முடியாது. ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது. கரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
மக்களை காக்கும் மகத்தான பணியில் என்னை நான் ஒப்படைத்துள்ளேன். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையே தேவை. தமிழக அரசு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசாக செயல்படும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.