1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த *சும்மா. அது சரி *சும்மா என்றால் என்ன??

சும்மா==  ‌படிச்சி தான் பாருங்களேன்😃😃😃😃

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த *சும்மா. 




அது சரி *சும்மா என்றால் என்ன??

பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த *சும்மா!!

"சும்மா" ======
என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால்  நம்ப முடிகிறதா?

வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை
நாம் அடிக்கடி கூறும் இந்த"சும்மா"* எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்.

1 . கொஞ்சம் "சும்மா" இருடா?
( அமைதியாக/Quiet)

2.கொஞ்ச நேரம் *"சும்மா" இருந்து விட்டுப் போகலாமே? (களைப்பாறிக் கொண்டு/Leisurely*)

3.அவரைப் பற்றி *"சும்மா" சொல்லக் கூடாது!
 (அருமை/in fact)*

4.இது என்ன *"சும்மா கிடைக்கும்னு
 நினச்சியா*?
 (இலவசமாக/Free of cost)

5. *"சும்மா" கதை அளக்காதே?
 (பொய்/Lie)

6. *"சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள் - 
(உபயோகமற்று*/Without use)

7. *"சும்மா"  "சும்மா" கிண்டல் பண்ணுறான். (அடிக்கடி/Very often)*

8.இவன் இப்படித்தான்.. *சும்மா சொல்லிக்கிட்டு இருப்பான்.
 (எப்போதும்/Always)

9.ஒன்றுமில்லை *"சும்மா" சொல்கின்றேன்- 
(தற்செயலாக/Just)

10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை *"சும்மா" தான் இருக்கின்றது 
(காலி/Empty)

11.சொன்னதையே *"சும்மா" சொல்லாதே.
(மறுபடியும்/Repeat)

12.ஒன்றுமில்லாமல்  *"சும்மா"  போகக் கூடாது- (வெறுங் கையோடு/Bare)

13. *"சும்மா"தான் இருக்கின்றோம்- 
 (சோம்பேறித் தனமாக/ Lazily)

14.அவன்  *"சும்மா" ஏதாவது உளறுவான் -
(வெட்டியாக/idle)

15.எல்லாமே  *"சும்மா" தான் சொன்னேன்-
(விளையாட்டிற்கு/Just for fun)

நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *"சும்மா" 
என்கிற ஒரு சொல். நாம்  பயன் படுத்தும் இடத்தின் படியும்  தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது (என்றால் அது   "சும்மா" இல்லை!)

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை.

ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags