நீட் தேர்வு தாக்கம் குறித்து 25 ஆயிரம் பேர் கருத்து: ஏ.கே.ராஜன்
நீட் தேர்வு தாக்கம் குறித்து இதுவரை 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஏ.கே.ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வு தாக்கம் குறித்து 25 ஆயிரம் பேரிடம் இருந்து கருத்துகள் வந்துள்ளன. பெரும்பாலும் இ-மெயிலில் தான் கருத்துகள் வந்தன. அதில், சிலர் நீட் வேண்டும் எனவும், சிலர் வேண்டாம் எனவும், சிலர் குறிப்பிட்ட வருடங்களுக்கு மட்டும் நீட் வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அரசு நிர்ணயித்துள்ள வரம்புக்குள் கருத்துகளை திரட்டி வருகிறோம். அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிந்த பின்னர் எங்களது அறிக்கை இறுதி செய்யப்படும்.
அரசாணைப்படி முடிந்தளவு ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அவசியம் ஏற்பட்டால் கூடுதல் அவகாசம் கேட்போமா என்பது தெரியாது. நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது. ஒவ்வொருவரின் காரணம் வெவ்வேறாக உள்ளது. எங்கள் குழுவினர் சனி, ஞாயிறு கிழமைகளில் கூட பணியாற்றுகின்றனர். அரசின் விதிமுறைகளை தாண்டி எங்களது பரிந்துரைகள் இருக்காது, விதிமுறைகளுக்கு உட்பட்டே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.