கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு, விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மை அந்தஸ்து அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பான, எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களில், நலிவடைந்த பிரிவினருக்கு, இலவச மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.
இந்த கல்வி ஆண்டுக்கான சேர்க்கைக்கு, rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில், ஜூலை, 5ல் விண்ணப்ப பதிவு துவங்கியது; நேற்றுடன் பதிவு முடியவிருந்தது.இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கருதி, அவகாசம், 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை, 73 ஆயிரம் பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.