1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

மக்களைத் தேடி மருத்துவம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

மக்களைத் தேடி மருத்துவம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் தோற்றா நோயாளிகளுக்கு வீடு தேடி மருந்துகள் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவ என்ற திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கோவை, சென்னை, சேலம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 7 மவட்டங்களில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார். 

முதலாவதாக கோவையில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து சென்னை, சேலம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

கோவையில், நஞ்சுண்டாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவ திட்டத்திற்கான வாகனங்களை வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, சுகாதாரத் துறை துணை இயக்குநர் எஸ்.செந்தில்குமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் ராஜா உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துகள் வழங்கப்பட்டது.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags