1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

+2 பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக சில ஆலோசனைகள்:

+2 பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக சில ஆலோசனைகள்:


+2 பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக சில ஆலோசனைகள்:

 




+2 பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தான்கல்லூரிகளில் உயர் கல்விக்கான சேர்க்கை நடைபெறுவது வழக்கம் என்பதால், 2020-21 ஆம் கல்வி ஆண்டில், +2 பொதுத் தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும்.

 

அப்போது தான் திறமை உள்ள மாணவர்களுக்குஅவர்கள் பெற்ற மதிப்பெண்களின் 

அடிப்படையில்தரமான கல்லூரியில்விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கும்.

 

பொதுத் தேர்வு நடைபெறா விட்டால்கல்லூரி சேர்க்கையில் சிக்கலை ஏற்படுத்தி விடும்.

 

பல கல்லூரி நிர்வாகங்கள் முக்கிய பாடங்களுக்கான சேர்க்கைக்கு இலட்சக் கணக்கில் 

நன்கொடை வசூலிக்கும் நிலையை ஏற்படுத்தி விடும்இது மாணவர்களுக்கும்பெற்றோர்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.

 

மேலும்ஒவ்வொரு தனிப்பட்ட கல்லூரியும் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்.

 

சில கல்லூரி நிர்வாகங்கள்வினாக்களை மிகக் கடினமாக அமைத்துஇதன் மூலம் 

நன்கொடை வசூல் வேட்டைக்கு வித்திடும் வாய்ப்பு ஏற்படும். 

 

இது மாணவர்களுக்கும்பெற்றோர்களுக்கும் அதிக செலவினம் மற்றும் மன உளைச்சலையும்தேவையற்ற அலைச்சலையும் உருவாக்கும்.

 

பள்ளி அளவில் நடைபெற்ற திருப்புதல் தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் 

வழங்கினால்ஒரு சில தனியார் பள்ளிகள் பெற்றோரிடம்

பணம் பெற்றுக் கொண்டு அதிக மதிப்பெண்கள் வழங்கக் கூடிய அபாயமும் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

மேலும், +2 பொதுத் தேர்வின்றி தேர்ச்சி அளிப்பதால்பிற்காலத்தில் மாணவர்களின் வேலை வாய்ப்பில் சிக்கலை ஏற்படுத்தும் நிலையும் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

தற்போதைய சூழலில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது.

 

ஜூலை முதல் வாரத்தில் கிட்டத்தட்ட தொற்று மிக மிக குறைவான நிலைக்கு வந்து விடும்.

 

ஆகவே ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15  வரைமொழிப் பாடங்களைத் தவிர்த்துஇதர முக்கிய 4 பாடங்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தலாம்.

 

மொழிப் பாடங்களுக்கு மட்டும்பள்ளி அளவிலேயே மதிப்பெண்களை வழங்க 

அனுமதிக்கலாம்.

 

அல்லது

 

மொழிப் பாடங்கள் இரண்டையும் சேர்த்து தமிழ் 50 மதிப்பெண்கள் + ஆங்கிலம் 50 

மதிப்பெண்கள்ஆக மொத்தம் 100 மதிப்பெண்கள் என ஒரே

நாளில் (தமிழ் 1 மணி நேரம் + ஆங்கிலம் 1 மணி நேரம் = மொத்தம் 2 மணி நேரம்தேர்வு 

நடத்தலாம்.

 

இரண்டு மொழிப் பாடங்களுக்கும் சேர்த்து 100 மதிப்பெண்கள்இதர பாடங்கள் 400 

மதிப்பெண்கள்.

 

ஆக மொத்தம் 500 மதிப்பெண்கள் என கணக்கிடலாம்.

 

தேர்வு எழுதும் மாணவர்கள்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்படாமல் இருக்க

 கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கலாம்:

 

 

+2 படிக்கும் ஒரு மாணவர்தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் 

எந்த மேல்நிலை அல்லது மெட்ரிக் பள்ளியில் படித்தாலும்பிளஸ் டூ பொதுத் தேர்வினைமாணவர் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள மெட்ரிக் / CBSE /  மேல்நிலை / உயர்நிலை / நடுநிலைப் பள்ளிகளில் தேர்வு எழுத அனுமதிக்கும் வகையில்தேர்வு மையங்கள் அதிகரிக்கப் பட வேண்டும்.

 

இடம் தேவைப்பட்டால் அருகில் உள்ள கல்லூரிகளையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.

 

ஏனென்றால்கொரோனா பாதிப்பால் சிலர் ஊர் விட்டு ஊர் புலம் பெயர்ந்து இருக்கலாம்.

 

பெற்றோரை இழந்துசொந்த ஊர் சென்றிருக்கலாம்.

 

ஒரு சில பள்ளிகளில் +2 வகுப்பில் மட்டும் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதிகளில் தங்கி பயிலக் கூடும்இதனால் தேர்வு நேரத்தில் இங்கு கொரோனா பரவும் அபாயமும் 

உண்டுதனி மனித இடைவெளியும் இங்கு கடைபிடிக்க முடியாது.

 

 ஆகவேதன் வீட்டருகே உள்ள பள்ளியில் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்குதேர்வு கூட அனுமதி சீட்டு / பள்ளி அடையாள அட்டை / ஆதார் கார்டு ஆகிய மூன்று ஆவணங்களையும் பயன் படுத்தி தேர்வு எழுத அனுமதிக்கலாம்.

 

தான் பயின்ற பள்ளியில் தேர்வு எழுதாமல்வீட்டின் அருகே உள்ள பள்ளியில் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்குவீட்டின் அருகே உள்ள பள்ளியில் தேர்வு எழுதஅப்பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் மூலம்முறைப்படி  விண்ணப்பிக்க உரிய வழிவகைகளை ஏற்பாடு செய்துவாய்ப்பு வழங்க வேண்டும்.

 

தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் வீட்டின் அருகேநடந்து செல்லும் தூரத்தில் அல்லது 

இரு சக்கர வாகனம் அல்லது மிதி வண்டியில் செல்லும் தூரத்தில் உள்ள பள்ளியில் 

சென்று தேர்வு எழுதுவதாலும்பொதுப் போக்குவரத்தை பயன் படுத்தத் தேவையில்லை 

என்பதாலும்கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை.

 

முடிந்த வரை உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கிதேர்வு எழுதுவதை தவிர்ப்பது நல்லது.

 

ஒரு தேர்வறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட வேண்டும்.

 

மாணவர்கள் படிக்க தேவையான கால அவகாசம் வழங்கும் வகையில்வாரம் ஒரு தேர்வு தான் வைக்கப் பட வேண்டும்.

 

எழுத்துத் தேர்வுக்கான 70 மதிப்பெண்களில், 20 மதிப்பெண்களுக்கான வினாக்கள் புறவய வினாக்களாக இருக்க வேண்டும்.

(Multiple Choice).

 

 

அடுத்த 30 மதிப்பெண்களுக்கான விடைகள் சிறு வினாக்களாகவும் (15 x 2 = 30), மீதமுள்ள 20 மதிப்பெண்கள் விரிவான விடை எழுதும் வகையிலும் (4 x 5 = 20) வடிவமைக்கப் பட வேண்டும்.

 

தேர்வு நேரம் காலை 10.00 மணி முதல் மதியம் 12.15 மணி வரை மட்டுமே நடத்தப் பட வேண்டும்இதில் 10.00 மணி முதல் 10.15 வரை வினாக்களை படிக்க நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

 

+2 பொதுத் தேர்வுக்காகமுக்கிய 4 பாடங்களான கணிதம்இயற்பியல்வேதியியல்உயிரியியல் / கணினி அறிவியல் பாடங்களில்ஒவ்வொரு பாடத்திற்கும் (Subject க்கும் - Not Lesson) தலா 10 வினா வங்கிகள் தயார் செய்து உடனடியாக மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

 

+2 பொதுத் தேர்வில் இந்த வினா வங்கியிலிருந்து மட்டும், 80% வினாக்கள் கேட்கப் பட வேண்டும்.

 

மீதமுள்ள 20 % வினாக்கள் பாடப்புத்தகத்தில்பாடங்களின் இறுதியில் உள்ள பயிற்சிகளிலிருந்து 

கேட்கப் பட வேண்டும்.

 

இதில் 10% சற்று கடினமாகவும்மீதமுள்ள 10% சற்று கூடுதல் கடினமாகவும் கேட்கலாம்.

 

+2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காககல்வித் தொலைக்காட்சியில் பாடங்களை அதிக நேரங்களை ஒளி பரப்ப வேண்டும்.

 


பள்ளி ஆசிரியர்கள் மூலம்ஐயப்பாடுகளை தொலைபேசி மூலம் தீர்க்க ஏற்பாடுகள் 

செய்ய வேண்டும்.

 

இது பெருந்தொற்று மற்றும் அசாதாரண சூழல் காலம் என்பதால்மாணவர்களுக்கு அதிக மன அழுத்தம் தரும் வகையில்பாடங்களின் உள்ளிருந்து (பயிற்சி வினாக்களைத் தவிரஎவ்வித கேள்வியும் இடம் பெறக் கூடாது.

 

 

மாணவர் எந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதினாலும்பார் கோடு இருப்பதால் மதிப்பீடு செய்தவுடன் சரியாக டேட்டா சென்டருக்கு மதிப்பெண் சென்று விடும்.

 

தேர்வு கண்காணிப்பு பணிகளுக்கு நடுநிலைப் பள்ளிஉயர்நிலைப் பள்ளி மற்றும் 

மேல்நிலைப் பள்ளிகளில்  பணிபுரியும் முதுநிலைபட்டதாரிகலை ஆசிரியர்கள் மற்றும்

இடைநிலை ஆசிரியர்களை பயன் படுத்த வேண்டும்.

 

தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்படும் அனைத்து ஆசிரியர்களுக்கும்முன்னுரிமை அடிப்படையில் ஜூன் 15 ஆம் தேதிக்குள் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

 

45 வயதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணி வழங்கும் போதுஅவர்கள் 

குடியிருக்கும் கல்வி மாவட்டத்திலேயே தேர்வுப் பணியை வழங்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.

 

இவ்வாறு +2 பொதுத் தேர்வை திட்டமிட்டு நடத்தினால்மாணவர்களுக்கும்ஆசிரியர்களுக்கும் கொரோனாத் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துதேர்வை சிறப்பாக நடத்தி முடிக்கலாம்

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags