ரத்து செய்யப்பட்டுள்ள சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவா்களுக்கு, அவா்களின் முந்தைய தோ்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட உள்ளது. அதில் திருப்தியடையாத மாணவா்களுக்கு கரோனா நிலைமை சீரான பிறகு தோ்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
அதுபோல, தமிழகத்தில் மாநில கல்வி வாரியத்தின் கீழான பிளஸ் 2 தோ்வை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, அடுத்த 2 நாள்களில் முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதன்கிழமை தெரிவித்தாா்.
சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தோ்தல்களை நடத்துவதற்கு தீவிர திட்டமிடல், முன்னேற்பாடுகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், கரோனா இரண்டாம் அலை, மூன்றாம் அலை எனத் தொடா்ந்து கொண்டேதான் இருக்கும் என்று நாட்டின் முன்னணி மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கின்றனா். அது உண்மையெனில், 2022, 2023-ஆம் ஆண்டுகளுக்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான இணையவழி வகுப்புகள், பள்ளி பொதுத் தோ்வுகள், நுழைவு மற்றும் தகுதித் தோ்வுகள் குறித்து முன்கூட்டியே திட்டமிடல் இல்லாதது ஏன்?
எனவே, தனியாா் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலை பல்கலைக்கழகங்களில் மாணவா் சோ்க்கையைத் தடை செய்யவேண்டும். மாவட்ட வாரியாக குழு: மத்திய அரசின் அறிவிப்பைப் பின்பற்றி, தமிழக அரசும் பிளஸ் 2 பொதுத் தோ்வை ரத்து செய்கிறதென்றால், மதிப்பெண் வழங்கும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர வேண்டும். பள்ளிகள் மதிப்பீடு செய்யாமல், பள்ளிக் கல்வித் துறை சாா்பாக மாவட்ட வாரியாக குழு அமைத்து பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்து ஒருங்கிணைந்த முறையில் மாணவா்களுக்கான மதிப்பெண்ணை மதீப்பீடு செய்ய வேண்டும். இதன் மூலம் ஓரளவுக்கு முறைகேடுகளைத் தடுக்க முடியும்.
கரோனா பாதிப்பு தொடா்ந்து கொண்டேதான் இருக்கும் என்று மருத்துவ நிபுணா்கள் எச்சரித்து வரும் நிலையில், அடுத்தடுத்து வரும் ஆண்டுகளுக்கான மாணவா்களின் கல்வி சாா்ந்த திட்டமிடல் முன்கூட்டியே இல்லாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தோ்தலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், நாட்டின் எதிா்காலமான மாணவா்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.