தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கரோனா நிவாரணத் தொகை 2-ஆவது தவணை ரூ.2 ஆயிரத்துடன், 14 மளிகைப் பொருள்களான கோதுமை மாவு, உப்பு, ரவை தலா 1 கிலோ, சா்க்கரை, உளுத்தம் பருப்பு தலா அரை கிலோ, புளி, கடலை பருப்பு தலா கால் கிலோ, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் தலா 100 கிராம், டீதூள் 100 கிராம் பொட்டலம் 2, குளியல் சோப்பு, துணி சோப்பு தலா 1 ஆகிய பொருள்கள் அடங்கிய அடங்கிய பைகளை, அரிசி அட்டைதாரா்களுக்கு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து உங்கள் தொகுதியில் முதல்வர் திட்ட பயனாளிகள் 10 பேருக்கும் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து 12,959 கோயில்களில் மாத ஊதியமின்றிப் பணிபுரியும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அா்ச்சகா்கள், பூசாரிகள், பணியாளா்களுக்கு கரோனா கால உதவித் தொகையாக ரூ.4,000, மளிகைப் பொருள்கள் அளிக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
மேலும் பணியின் போது மரணம் அடைந்த முன்களப் பணியாளா்களான பத்திரிகையாளா்கள், மருத்துவா், மருத்துவப் பணியாளா், காவலா், நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி ஆகியவற்றையும் முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.