முடங்கிய இ-பதிவு தளம் மீண்டும் செயல்படத் துவங்கியது
இன்று (ஜூன் 7) முதல் 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கிய இ-பதிவு பக்கம், தற்போது மீண்டும் செயல்படத் துவங்கியது.
தமிழகத்தில் சில பகுதிகளில் கோவிட் தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், இன்று (ஜூன் 7) முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக எலக்ட்ரீசியன், பிளம்பர், கணினி பழுது பார்ப்பவர்கள், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், கார்பெண்டர், வீட்டு வேலை செய்பவர்கள், தனியார் பாதுகாப்பு சேவை போன்ற சுய தொழில் செய்வோருக்கு இ-பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து, ஏராளமானோர் ஒரே நேரத்தில் இ-பதிவு தளம் வழியாக விண்ணப்பித்ததன் காரணமாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, அந்த இணையதளப் பக்கம் இன்று காலை முடங்கியது. இதனை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப பிரிவினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் இ-பதிவு இணையதளம் செயல்படத் துவங்கியது. மேலும், சுய தொழில் செய்பவர்களுக்கான இ-பதிவு பிரிவு நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.