பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக அனை வரிடமும் கருத்து கேட்டு 2 நாள்களில் முடிவு எடுக்கப்படும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் உள்பட அனைவரிடமும் அடுத்த 2 நாள்களுக்கு கருத்துகள் கேட்கப்படும் என்றும்,
கருத்துக்களின் அடிப்படையில் பொதுத்தேர்வை நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இன்று (ஜூன்2) காலை ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்ததாவது,
மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக கருத்து கேட்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளோம்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மருத்துவ வல்லுநர்கள் உள்பட அனைவரிடமும் அடுத்த 2 நாள்களுக்கு கருத்துகள் கேட்கப்படும்.
பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் பொதுத்தேவை நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுத்தேர்வு குறித்து அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்கும் வகையில் மின்னஞ்சல் மற்றும் தொலைப்பேசி எண் விரைவில் அறிவிக்கப்படும். பிற மாநிலங்கள் எடுக்கும் நிலைப்பாடு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டும் முடிவு எடுக்கப்படும்.
மேலும், தேர்வை விட மாணவர்களின் உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் முக்கியம் என்று ஆலோசனையின்போது முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார் என்று அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.