தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு தொடர்பாக 2 நாட்களில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.
மாணவர்களின் நலன் கருதி, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதனை தொடர்ந்து, தமிழகத்தில் தேர்வு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர்மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் நலனும், பாதுகாப்பும் முக்கியம். மத்திய அமைச்சர ராஜ்நாத் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தேர்வை நடத்த வேண்டும் என பெரும்பாலான மாநிலங்கள் தெரிவித்திருந்தன. நேற்று, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.
முதல்வர் ஸ்டாலினுடன் நடந்த ஆலோசனையில், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யலாம் என தெரிவித்து உள்ளார். இதனால், அனைத்து தரப்பு கருத்துகளை கேட்ட பின்னர், 2 நாட்களில் முடிவை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்.
மாணவர்களின் மதிப்பெண் முக்கியம் என்பதால், கவனத்துடன் முடிவு எடுக்கப்படும். தேர்வு தொடர்பாக மாணவர்கள், மாணவிகள் இடையே இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், தேர்வு நடத்த வேண்டும் எனக்கூறுகின்றனர். வேறு சிலர் தேர்வு வேண்டாம் எனக்கூறுகின்றனர். இதனால், தேர்வு தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். நீட் தேர்வு தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
tnschooledu21@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 14417 என்ற தொலைபேசி எண்ணிலோ பொதுத்தேர்வு குறித்து கருத்துகளை கூறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.