பள்ளி கல்வி செயல்திறன் தரவரிசை பட்டியலில் தமிழகம் இரண்டாமிடம்: மத்திய அமைச்சர் ரமேஷ்பொக்ரியால்
மத்திய அரசு வெளியிட்டுள்ள பள்ளி கல்வி செயல்திறன் தரவரிசை பட்டியலில் தமிழகம் மற்றும் கேரளா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
![]() |
இது குறித்து மத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: பள்ளி கல்வி செயல்திறன் தரவரிசை குறியீடு 2019-2020 ல் மாநில வாரியான செயல்திறன்களை ஒப்பிடும் போது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் தரவரிசை குறியீட்டு மதிப்பெண்களை மேம்படுத்தி உள்ளன. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
பள்ளிகல்வி செயல்திறன் தரவரிசை குறியீடு குறித்து மத்திய அரசு ஒன்று, இரண்டு, என10 கிரேடுகளாக மாநிலங்களை வரிசை படுத்தி உள்ளது. இந்த வரிசையில் முதல் கிரேடில் எந்த மாநிலமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டாவது கிரேடில் தமிழகம், கேரளா,உள்பட ஐந்து மாநிலங்கள் 900 முதல் 950 மார்க்குகள் பெற்றுள்ளது.
![]() |
மூன்றாமிடத்தில் தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி, குஜராத் , மகாராஷ்டிரா ஹரியானா, டில்லி, புதுச்சேரி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. நான்காம் இடத்தில் ஆந்திரா, டையுடாமன், இமாச்சல்பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, திரிபுரா, உ.பி., மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
கடைசி கிரேடான 10 ம் இடத்தை லடாக் யூனியன் பிரதேசம் பிடித்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.