ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர் இன்று ஆலோசனை
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துதல், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று சுகாதாரத் துறையினருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் ஜூன் மாதத்தில் இருந்து, கொரோனா தொற்று தாக்கம் குறையத் துவங்கியது. ஆனால், சில நாட்களாக மீண்டும் சற்று உயரத் துவங்கி உள்ளது. இந்நிலையில், கூடுதல் தளர்வுகளின்றி நடைமுறையில் இருந்த ஊரடங்கு, 9ம் தேதி காலை 6:00 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
தொடர்ந்து நோய் பரவல் அதிகரித்தபடியால், ஆங்காங்கே சில கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்து வருகின்றன. திடீர் திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும், குறிப்பிட்ட பகுதியில் கட்டுப்பாடு, மற்ற பகுதிகளில் கட்டுப்பாடு இல்லாதது போன்றவை, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.
நோய் பரவல் வேகம் அதிகரிக்கும் முன், அதை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்வதற்காக, தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. முதல்வர் தலைமையில் இன்று காலை 11:30 மணிக்கு நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், சுகாதாரத் துறையினர் பங்கேற்க உள்ளனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.