1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு --பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு --பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு



இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்தியாவின் முதன்மை மின்னணுவியல் நவரத்னா நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்  ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 511 டிரெய்னி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.







 

பணி: Trainee Engineer -I

காலியிடங்கள்: 308

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.25,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.28,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.31,000 வழங்கப்படும்.

பணி: Project Engineer-I

காலியிடங்கள்: 203

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா...? அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: முதலாம் ஆண் மாதம் ரூ.35,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.40,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.45,000, நான்காம் ஆண்டு மாதம் ரூ.50,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: பிஇ, பி.டெக் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவங்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: Trainee Engineer -I பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.200,  Project Engineer-I பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bel-india.inஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.08.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web-advt-English-03-08-2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags