மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, ஜூலை, 26ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தேர்வு தேதிகளை ஒத்தி வைக்க வேண்டும் என, மாணவர்களும், அவர்களது பெற்றோரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கொரோனா பரவல் இன்று வரை குறையாத நிலையில், நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என, பல தரப்பிலிருந்தும் கோரிக்கை வந்தது. இதையடுத்து, தேர்வுகளை நடத்துவதற்கான நிலைமையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.
இக்குழு தனது அறிக்கையை சமர்பித்துள்ளதையடுத்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் செப். 13-ம் தேதி நடைபெறும் . ஜே.இ.இ., முதன்மை தேர்வு செப்.1- முதல் துவங்கி செப்.6-ம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.