12ம் வகுப்பு தேர்வு ரத்துக்கு தடைவிதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்
12ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் முடிவுக்கு தடைவிதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவிட் 2வது அலை பரவலை கருத்தில்கொண்டு மத்திய அரசு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும், 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில் 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்ததை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
அதில், ‛2020-21 கல்வியாண்டில் பெரும்பாலானபள்ளிகளில் இணையவழி வகுப்புகள், காலாண்டு மற்றும் அரையாண்டுதேர்வுகள் என எதுவும் நடைபெறவில்லை. எனவே, மேற்படிப்பு வகுப்புகளின் கல்வி சேர்க்கை தகுதியை நிர்ணயம் செய்து மேற்படிப்பு கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்தும் யுஜிசி, மெடிக்கல் கவுன்சில், ஏஐசிடிஇ, நர்சிங் கவுன்சில், டெண்டல் கவுன்சில், பார் கவுன்சில் உடன் கலந்து முடிவு எடுக்காமல் தமிழக அரசின் கல்வித்துறை 12ம் வகுப்பு இறுதித் தேர்வை ரத்து செய்தது தவறு. கோவிட் பரவல் குறைந்து வரும் சூழலில் ஓரிரு மாதங்கள் கழித்து தேர்வு நடத்தலாம்,' எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜியிடமிருந்து நீதிபதிகள் செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் முடிவுக்கு எந்த ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், இதில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.