1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் விரைவில் பஸ் போக்குவரத்து..! மு.க.ஸ்டாலின் ஆலோசனை

பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் விரைவில் பஸ் போக்குவரத்து..! மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கொரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகங்கள் தயாராகி வருகின்றன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கொரோனா பரவலைதடுக்கும் வகையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அத்தியாவசிய பணியாளர்களுக்கு தேவையான அளவில் பேருந்துகளை இயக்கி வருகிறோம். அதேபோல், பேருந்துகளில் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, தமிழக அரசு அறிவித்தவுடன், கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகளை இயக்க நாங்கள் தயாராக உள்ளோம். தமிழக அரசு அறிவிப்புக்காக காத்திருக்கிறோம். இருப்பினும், வரும் 21-ம் தேதிக்குப் பிறகு குறைந்த அளவில் பேருந்துகள் இயக்க வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்று தெரிவித்தனர்

தமிழகத்தில் அரசு பஸ்கள் இயக்குவது குறித்து முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தினார் 

கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ் போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா குறைந்து வரும் நிலையில் பஸ்  சேவைகளுக்கு தளர்வுகள் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags