'நீட்' தேர்வு விரைவில் முடிவு :மத்திய அரசு அறிவிப்பு
நீட்' மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை நடத்துவது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐ.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் போன்ற தொழில் கல்வி படிப்பதற்காக, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வும், மருத்துவ படிப்பில் சேருவதற்கு, நீட் நுழைவு தேர்வும் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு முதல், ஜே.இ.இ., நுழைவுத்தேர்வை பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடத்த மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்தது. பிப்ரவரி, மார்ச்சில் ஜே.இ.இ., தேர்வுகள் நடந்து முடிந்து விட்டன.
![]() |
கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக மீதியுள்ள இரண்டு கட்ட ஜே.இ.இ., தேர்வுகளும், நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த தேர்வுகளை நடத்துவது பற்றி, மத்திய கல்வி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:நீட் மற்றும் மீதியுள்ள ஜே.இ.இ., தேர்வுகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது பற்றி முடிவெடுக்கப்படும். தேதி முடிவு செய்யப்பட்டதும், நீட் தேர்வுகான பதிவும் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.