தலைமுடி பராமரிப்பில் செய்யக்கூடாதவை
► தலைக்கு குளித்தவுடன் தலையை துண்டால் இறுக்கக் கட்டக்கூடாது. சுத்தமான இலகுவான காட்டன் துணியை பயன்படுத்துவது நல்லது. தலைமுடிக்கு அழுத்தம் கொடுக்காமல் மிகவும் சாதாரணமாக உலர்த்த வேண்டும்.
► தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீப்பால் தலை வாரக்கூடாது. நன்கு உலர்த்திய பின்னரே தலைமுடியை சீவ வேண்டும்.
► சீப்புகளில் பிளாஸ்டிக் சீப்பை பயன்படுத்தாமல் மரத்தால் ஆன சீப்புகளை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் இதனால் முடி வெப்பமடைந்து உதிர்வது தடுக்கப்படும்.
► தலைமுடியில் சிக்கல் இருந்தால் அதனை அவ்வப்போது வாரிவிடுவது நல்லது. சிக்கலை வைத்துகொண்டே இருந்தால் மிகப்பெரிய முடி உதிர்வுக்கு அது வழிவகுக்கும்.
தலைமுடி உதிர்வைத் தடுக்கும் இயற்கை வழிமுறைகள்!► தலையில் எண்ணெய் பதம் இருப்பது அவசியம். காலையில் தலைக்கு எண்ணெய் வைக்க முடியாதவர்கள் இரவில் வைத்துவிட்டு காலையில் தலைக்கு குளித்துவிட்டுச் செல்லலாம்.
► முடிந்தவரை 'ப்ரீ ஹேர்' விடுவதை தவிர்ப்பது நல்லது. அவ்வாறான சூழ்நிலைகளில் மாசு அதிகம் இருக்கும் இடங்களைத் தவிர்க்கலாம்.
► இரவில் படுக்கப்போகும் முன் தலைமுடியின் மேலிருந்து கீழ் வரை சீவி பின்னி விட்டு படுத்தல் நன்று. இதனால் சுருள் முடி கூட சிறிது நேராக வாய்ப்புண்டு.
► தலையணையை அழுக்கின்றி சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.