பிளஸ் 2 பொதுத்தேர்வுஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
பாடத் திட்டம், நேரம் குறைப்பு உள்ளிட்ட சில மாற்றங்களுடன் பிளஸ் 2 பொதுத் தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும்' என தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
சங்க மாநில தலைவர் சுரேஷ், பொது செயலாளர் மனோகரன் தெரிவித்துள்ளதாவது:மத்திய அரசு சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளது. ஆனால் நீட் தேர்வு குறித்து அறிவிப்பு இல்லை. அதை மத்திய அரசு நடத்த வாய்ப்புள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டுமா வேண்டாமா என பெற்றோர், ஆசிரியர், கல்வியாளரிடம் இணையவழியில் கருத்துக்கேட்டு இன்றைக்குள் (ஜூன் 3) அறிக்கை அனுப்பி வைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவசரமாக உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் சற்று தாமதித்து, பாடத் திட்டம், தேர்வு நேரம் குறைப்பு உள்ளிட்ட சில மாற்றங்களுடன் எந்த வழியிலாவது தேர்வு நடத்த வேண்டும். ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம். இதில் துளியும் சமரசம் வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.