‛நீ மட்டும் சந்தோஷமாக இருக்கியா'! ; மருமகளை கட்டிப்பிடித்த கோவிட் மாமியார்
ஐதராபாத்-கொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பெண், தன்னை அனைவரும் ஒதுக்குகின்றனர் என்றஆத்திரத்தில், மருமகளை கட்டிப்பிடித்து, அவருக்கும் தொற்றை பரப்பிய சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியது.
தெலுங்கானாவின் ராஜன்னா சிர்சிலா மாவட்டத்தில், சோமரிப்பேட்டா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.தனி அறையில் அவருக்கு வேண்டிய உணவுகளை, அவரது மருமகள், பாதுகாப்புடன் வழங்கி வந்தார். பேரக்குழந்தைகள்உட்பட, வீட்டில் உள்ள அனைவரும் அந்த பெண்மணி இருந்த அறை பக்கம் செல்லவில்லை.அனைவரும் தன்னை ஒதுக்குகின்றனர் என்ற எண்ணம், அந்த பெண்ணுக்கு ஏற்பட்டது; நாளடைவில் ஆத்திரமாக மாறியது.
தனக்கு வந்த நிலைமை, மருமகளுக்கும் வரவேண்டும் என்ற பழிவாங்கும் எண்ணம் எழுந்தது. உணவளிக்க வந்த மருமகளிடம், 'நான் இறந்ததும் அனைவரும் சந்தோஷமாக வாழ நினைக்கிறீர்களா?' எனக் கேட்டபடி, அவரை கட்டியணைத்தார்.இதனால், அடுத்த சில நாட்களில் மருமகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அந்த மருமகள் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். அருகே, திம்மப்பூர் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.