மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. திருப்பூர் மாணவர் ஸ்ரீஜன் 710 மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்தார்.
தமிழகத்தில் மருத்துவப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். நீட் தேர்வில் தகுதிப்பெற்று ஆன்லைன் விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. 3650 மருத்துவ இடங்களுக்கு 34,424 பேர் விண்ணப்பத்திருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்மூலம் 405 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்படி, தேனி சில்வார்பட்டி மாணவர் ஜீவித்குமார் 664 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளார். நவ.,18 முதல் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. தினம்தோறும் 500 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.