திறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது? அமைச்சர் செங்கோட்டையன்
நீட் தேர்வு பயிற்சிக்கு நேற்று 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நீட் தேர்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு காரணமாக 303 பேர் கூடுதலாக மருத்துவர்களாக முடியும். பள்ளி திறப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை. இதுகுறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். தனியார் பள்ளியில் இருந்து 5.25 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். திறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்படலாம்
அப்படி பாதிப்பு ஏற்பட்டால், யார் பொறுப்பேற்பது? நீட் பயிற்சிக்காக நேற்று முன்தினம் வரை 9,842 பேர் பதிவு செய்திருந்த நிலையில், நேற்று 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். நீட் பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.