1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

இரத்த அழுத்தத்திற்கு சேர்க்க வேண்டிய & தவிர்க்க வேண்டிய உணவுகள்

 
இரத்த அழுத்தத்திற்கு சேர்க்க வேண்டிய உணவுகள்







உணவுகளில் சத்தான, கொழுப்பு  குறைந்த, ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.  காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் புரதச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் கொழுப்பு இல்லாத பால் பொருட்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.  

கொட்டைகள், விதைகள், புதிய பழங்களைச் சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் காலையில் முருங்கைக்கீரையும், சிறிய வெங்காயமும் சேர்த்து சூப் சாப்பிடலாம். 

மதிய உணவில் 5  பூண்டுப்பற்கள், 5 சிறிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

நீர்க்காய்களான வாழைத்தண்டு, வாழைப்பூ, சுரைக்காய், பீர்க்கங்காய், பார்லி, பீட்ரூட், தக்காளி ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்ப்பது அவசியம். எண்ணெய் உணவில் குறைவாக சேர்க்கலாம்.

அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் மீன் குழம்பு வைத்து சாப்பிடலாம் பொரித்தமீன் ஆகாது.

சீரகத்தை லேசாக வறுத்து அதை மூன்று நாட்கள் இஞ்சிச் சாறிலும், மூன்று நாட்கள் எலுமிச்சைச் சாறிலும் இன்னும் மூன்று நாட்கள் கரும்புச்சாறிலும் ஊறவைத்து உலர்த்திப் பொடித்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை காலை மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். கடைகளில் சீரக சூரணமாகவும் கிடைக்கும்.

வெந்தயத்தை தினமும் பொடித்து சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டியவை:

உப்பு, சர்க்கரை, பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்படும் உணவுகளான சிப்ஸ், கப் நூடுல்ஸ், வறுத்த நிலக்கடலை போன்றவற்றில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்க்கப்பட்டிருக்கும், பீட்சா, பர்கர், ஹாட் டாக் என நம்முடைய உணவுமுறைக்கு சற்றும் தொடர்பில்லாத உணவு வகைகள்,   பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மீன் போன்ற அசைவப் பொருள்கள். அதிக உப்பு பயன்பாடு நிச்சயம் இரத்த அழுத்தத்தைப் பாதிக்கும். பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்கள், மது, நாம் சப்புக்கொட்டிச் சாப்பிடும் ஊறுகாய், மாவடு ஆகியவையும் இந்தப் பட்டியலில் அடங்கும். பேக்கரி உணவுகள் ஆகியவற்றை தவிர்க வேண்டும்.

பல காய்கறிகளில் நமக்கு தேவையான உப்புச் சத்து அதிகம் உள்ளது. அதனால், மிகச் சிறிதளவே உப்பு சேர்த்தால் போதுமானது. ரத்தக் கொதிப்பு இருப்பவர்கள் உப்பை மறந்தே தீரவேண்டும்.  

பொதுவாக செய்ய வேண்டியது

காலையும் மாலையும் சிறிது நேர உடற்பயிற்சி அவசியம். அதோடு நடை பயிற்சியும் அவசியம். உடல் எடை கட்டுக்குள் இருக்க வேண்டும்.

சரியான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான நடவடிக்கைகள் மூலம் இரத்த அழுத்தத்தை எதிர்க்க முடியும்.

இரத்த அழுத்தத்திற்குக் காரணமான மன அழுத்தத்தை தவிர்க்க மனதை ஒருநிலைப்படுத்தவும் தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்ளலாம். காலையில் தினம் அமைதியான சூழலில் பத்து நிமிட தியானம் மன அழுத்தத்தினைக் குறைக்கிறது.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags