சி.பி.எஸ்.இ., 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2021 மே 4-ல் தொடங்கி ஜூன் 10-ல் முடிவடையும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
பிப்ரவரி வரை சி.பி.எஸ்.இ., தேர்வுகளை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என டிச., தொடக்கத்தில் மத்திய கல்வி அமைச்சர் கூறியிருந்தார். மாநிலங்களில் தொற்றுநோய்களின் நிலைமையை ஆராய்ந்த பின்னரே தேர்வு தேதிகள் முடிவு செய்யப்படும், வழக்கமான முறையிலேயே தேர்வு நடைபெறும், ஆன்லைன் முறையில் இருக்காது என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் டுவிட்டர் நேரலையில் சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு தேதிகளை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார். செயல்முறை தேர்வுகள் மார்ச் முதல் தேதி தொடங்கும். எழுத்துத் தேர்வு மே 4 தொடங்கி ஜூன் 10-ல் முடியும் என கூறினார். தேர்வு முடிவுகள் ஜூலை 15 அன்று வெளியிடப்படும் என்றார். விரிவான அட்டவனை இணையதளத்தில் விரைவில் பதிவேற்றப்படும்.
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நன்றி
தொற்றுநோயினால் ஒரே நாளில் ஆன்லைன் வகுப்பறைக்கு மாறினோம். ஆசிரியர்களின் உதவியால் இது நடந்தது. இணையம் மற்றும் ஸ்மார்ட்போன்கள் இல்லாத மாணவர்களுக்கு உதவ, “ஒரு வகுப்பு ஒரு சேனல்” அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி என்றும் கூறினார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.