100க்கும் மேற்பட்ட ஆன்லைன், திறந்தநிலைப் படிப்புகள்: யுஜிசி தொடக்கம்
இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவுகளில் 100க்கும் மேற்பட்ட ஆன்லைன், திறந்தநிலைப் படிப்புகளை யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
இதற்காக மத்திய அரசின் ஸ்வயம் தளத்தில் 78 இளநிலை மற்றும் 46 முதுநிலை பாடப்பிரிவுகள் (Massive Online Open Courses- MOOCS) தொடங்கப்பட்டுள்ளன.
டெல்லி பல்கலைக்கழகம், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உட்பட யுஜிசியின் கீழ் இயங்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முழு நேரம் மற்றும் பகுதி நேரமாகப் படிக்கும் மாணவர்கள், இந்தப் படிப்புகளின் மூலம் கூடுதல் தகுதியைப் பெறுவர். பிற மாணவர்களும் இவற்றைப் படிக்கலாம்.
இந்த ஆன்லைன் படிப்புகளை முறைப்படுத்தி, மாணவர்களை வழிநடத்த நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
78 இளநிலைப் பாடப்பிரிவுகளின் பட்டியலைக் காண: https://www.ugc.ac.in/pdfnews/7250036_Final_List_of_Courses_for_Jan_2021_UG.pdf
46 முதுநிலை பாடப்பிரிவுகளின் பட்டியலைக் காண: https://www.ugc.ac.in/pdfnews/4048319_Final_List_of_Courses_for_Jan_2021_PG.pdf
கூடுதல் விவரங்களுக்கு: swayam.gov.in/CEC
பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் இயங்கும் கல்வி தொடர்புக்கான கூட்டமைப்பில் (CEC) இந்தப் புதிய படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பொறியியல் அல்லாத இளநிலை மற்றும் முதுநிலைப் பாடப் பிரிவுகள் ஆகும்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.