1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தேர்வுக்கு ஆதார் கட்டாயமில்லை: டி.என்.பி.எஸ்.சி.,புதிய அறிவிப்பு வெளியீடு

தேர்வுக்கு ஆதார் கட்டாயமில்லை: டி.என்.பி.எஸ்.சி., புதிய அறிவிப்பு வெளியீடு


 தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய ஆதார் கட்டாயமில்லை என டி.என்.பி.எஸ்.சி., புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வானையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்புஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும், அவர்களின் ஒரு முறைப்பதிவு மற்றும் நிரந்தர பதிவில், தங்கள் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். இதுவரை, ஆதார் எண்ணை பதிவு செய்யாதவர்கள், விரைவில் பதிவு செய்ய வேண்டும்.

தேர்வர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட, ஒரு முறைப்பதிவு வைத்திருக்க அனுமதியில்லை. ஆனால், பலர் தவறுதலாக, ஆதார் எண்ணை பதிவு செய்துள்ளதாக, தேர்வாணையத்திற்கு தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு ஒரு முறை மட்டும், தங்களின் ஆதார் பதிவை ரத்து செய்து, தங்கள் விருப்பப்படி, நிரந்தர பதிவில் ஆதார் எண்ணை இணைக்க, https://www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். வரும் காலங்களில், தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யும் முன், தங்களின் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது. ஜன., 3ல் நடக்க உள்ள, 'குரூப் -1' முதல் நிலை தேர்வு; ஜன., 9, 10ல் நடக்க உள்ள தொழில், வணிக துறையில் உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வு ஆகியவற்றுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்த பின், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.



ஆதார் தேவையில்லை


இந்நிலையில் இன்று (26ம் தேி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதற்கு ஆதார் கட்டாயமில்லை என தெரிவித்துள்ளது.



Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags