பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிச்செட்டிபாளையத்தில் வேளாண் விரிவாக்க மைய கட்டடப் பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி அறிவிக்கப்பட்டது என்றும், இந்தாண்டு நிலைமை வேறு எனவும் கூறினார். தற்போதைய அதிமுக ஆட்சி மே 24 ம் தேதி முடிவடைவதால் அதற்கு முன் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து நல்ல முடிவு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தாண்டு 11 புதிய மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் வருவதாக கூறினாலும், ஆலயங்கள் திறக்கப்பட்டு வழிபாடு நடத்த அரசு அனுமதித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். விவசாயிகள், தொழிலதிபர்கள், மாணவர்கள் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.