வேலைக்கு செல்லும் அவசரத்தில் பலரும் காலை உணவை சரியாக உண்ணாமல் தவிர்த்து விடுகின்றனர். எனவே இவர்களின் இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இதனால் மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்க முடியாமல் மூளை அழிவுக்குக் காரணமாகிறது. எனவே காலை உணவை தவிர்க்காமல் சாப்பிடுங்கள்.
👉 ஒருவர் அளவுக்கு அதிகமாக உணவினை உட்கொண்டால், அதுவே மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி விடும். இதனால் மூளையின் சக்தி குறைந்து விடும்.
👉 புகைப்பிடிப்பதனால் கேன்சர் வருவது மட்டுமின்றி அல்ஸைமர் வியாதியும் உண்டாகும். மேலும் இப்பழக்கத்தினால் மூளையில் பாதிப்பு ஏற்படும்.
👉 சிலர் சர்க்கரை என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்பழக்கத்தினால் நமது உடலில் உள்ள புரோட்டின் சேர்வது தடுக்கப்படுகிறது. இதனால் மூளை வளர்ச்சி பாதிப்படைகிறது.
👉 நாம் மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதால், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதில் தடை உண்டாகிறது. இதனால் மூளைக்கு ஆக்ஸிஜன் சரியாக செல்லாமல் மூளை பாதிப்படைகிறது.
👉 தினசரி நல்ல தூக்கத்தினால் நம் மூளைக்கு ஓய்வு கிடைக்கிறது. நீண்ட நாட்களாக சரியாக தூங்காமலிருப்பது மூளைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
👉 பெரும்பாலானோரிடம் இருக்கும் ஒரு பழக்கம் தலையை மூடிக்கொண்டு தூங்குவது. இப்படி தூங்குவதனால் போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரித்து, நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைத்து மூளையைப் பாதிப்படையச் செய்கிறது. எனவே இப்பழக்கத்தை தவிர்த்திடுங்கள்.
👉 உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையை அதிகளவு பாதிக்கும். உடல்நிலை சரியான பின்பு, மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
👉 மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பதால் மூளை பாதிப்படையும். மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையாகும்.
👉 அறிவுப்பு ர்வமான உரையாடல்களை பேசாமல் இருப்பதனாலும் மூளை பாதிப்படைகிறது. அறிவுப்பு ர்வமான உரையாடல்களை மேற்கொண்டு மூளையின் வலிமையை அதிகரிக்கலாம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.