இந்நிலையில் அரசு அதனை தவிர்க்க புதுவகை நம்பர் ப்ளேட்களை அறிமுக செய்துள்ளது. High Security Registration Plate ( HSRP) உயர் பாதுகாப்பு நம்பர் ப்ளேட்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
HSRP என்றால் என்ன?
நம்பர் ப்ளேடானது அலுமினியம் உலோகத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவை வாகனத்தில் இருந்து எளிதில் அகற்ற முடியாத வாறு பொறுத்தப்பட்டிருக்க வேண்டும். நம்பர் ப்ளேட்டின் இடது புற ஓரத்தில் அசோக்க சக்கரம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அது நீல நிறத்தில் 20×20 என்ற அளவில் இருக்க வேண்டும். வாகனத்தின் 10 இலக்க எண்கள், லேசர் முறையில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அதே போன்று வாகனம் எந்த வகை எரிபொருளில் இயங்குகிறது என்பதை உணர்த்து வகையில் வண்ணங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். நீல நிறம் : பெட்ரோல், ஆரஞ்ச் நிறம் : டீசல், பச்சை நிறம்: எலக்ட்ரிக் வாகனங்கள்.
எங்கு கிடைக்கும் இந்த HSRP ப்ளேட்கள்?
அரசின் இந்த புதுவகை நம்பர் ப்ளேட்களை அருகே உள்ள போக்குவரத்து அலுவலகங்களில் சென்று பெற்றுக்கொள்ளலாம். அரசு அங்கீகாரம் பெற்ற கடைகளிலும் இந்த நம்பர் ப்ளேட்களை பெற்றுக்கொள்ளலாம். டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இணையதள பக்கம் செயல்பட்டு வருகிறது.
புதுவகை நம்பர் ப்ளேட்களை வாங்க எவ்வளவு செலவாகும்?
HSRP நம்பர் ப்ளேட்களின் விலை மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோராயமாக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.400, 4 சக்க வானங்களுக்கு ரூ.1,100 வரை ஆகும் என கூறப்படுகிறது.
தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இந்த திட்டம் செயல்பட்டிற்கு கொண்டு வரப்படாத நிலையில், டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இச்சட்டம் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த திட்டம் தமிழகத்தில் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் இவ்வகை நம்பர் ப்ளேட்களை பயன்படுத்தாத வாகனங்களுக்கு தற்போது ரூ.5500 அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.