*தோட்ட வளர்ப்பு என்பது, பயனுள்ள பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சி மட்டுமின்றி, மன அழுத்தத்தையும் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
*நமக்குத் தேவையான காய்கறிகளை, நாமே விளைவித்து சாப்பிடுவதில் கிடைக்கும் திருப்தியும், மகிழ்ச்சியும் தனி தான்.
*காய்கறி தோட்டம் அமைப்போர், முதலில் கவனிக்க வேண்டியது, இடவசதி. மொட்டை மாடியில் அதிகளவு வெயில் அடிக்கிற மாதிரி இருந்தால், ‘நிழல் வலை’ எனப்படுகிற வலையைக் கொண்டு தோட்டம் அமைக்கலாம்.
*மாடியில் தோட்டம் அமைக்கும்போது, தரையில், ‘ஒயிட் வாட்டர் புரூப் பெயின்ட்’ அடிப்பது நல்லது.
*முடிந்தளவு புதிய பொருட்களை வாங்காமல், வீட்டிலிருக்கும் மண் தொட்டி, பானை, வாட்டர் பாட்டில், பழைய வாளி, கெட்டியான பாலிதீன் பைகள், அரிசி சாக்கு ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். அதில், நீர் செல்ல சிறு துவாரம் இட வேண்டும்.
*வீட்டுத் தோட்டம் அமைக்கத் தேவையான இடுபொருட்கள், விதைகள் அனைத்தும் இப்போது, எல்லா வேளாண், உரக் கடைகளிலும் கிடைக்கின்றன.
*விதைகள் வாங்கும்போது முடிந்தளவுக்கு உயர்ரக விதைகளாக அல்லாமல், நாட்டு விதைகளாக வாங்குவது நல்லது.
இந்த காய்கறி தோட்டத்தில் தக்காளி, மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை மற்றும் கீரை வகைகளை வளர்க்கலாம்.
*கீரையில் வேர் அதிகம் கிடையாது என்பதால், ஒரு பிளாஸ்டிக் சாக்கை தரையில் விரித்து, மண் நிரப்பி கீரை வகைகளை வளர்க்கலாம்.
*வேப்ப இலைகளை நன்கு காய வைத்து துாள் செய்து, செடி ஒன்றுக்கு ஒரு கைப்பிடி வீதம், செடியின் வேர்ப்பகுதியில் போட்டு நன்கு கொத்தி விட வேண்டும். இதுவே அடியுரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
*முட்டை ஓடு, மீன் தொட்டிக் கழிவுநீர், அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய நீரை கூட செடிகளுக்கு இடலாம்.
*செடிகளைக் கொண்டுள்ள கட்டடங்கள், இவை அல்லாத கட்டடங்களை விட குளிர்ச்சியாக இருக்கும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.