1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பீட்சா பிரியரா நீங்கள்? அப்போது இந்தப் பிரச்சினை கண்டிப்பாக உங்களுக்குத் தான்..


பீட்சா பிரியரா நீங்கள்? அப்போது இந்தப்  பிரச்சினை கண்டிப்பாக உங்களுக்குத் தான்..








பீட்சா. இன்றைய இளசுகளுக்கு மிகவும் பிடித்த ஓர் உணவு; உணர்வு என்றுகூடச் சொல்லலாம். பீட்சாவின் மீது உணர்வுரீதியான காதல் இன்றைய இளவட்டங்களுக்கு! கடந்த பத்தாண்டுகளில், நமது தேசத்தில் அசுர வளர்ச்சியடைந்த உணவு எதுவென்று கேட்டால், பீட்சாவே உயிர்ப்பெற்று தனது கையை உயர்த்தி, 'நான்தான்' என்று கர்வம்கொள்ளும்.

பக்கவாதம் மற்றும் இதய நோய் சார்ந்த பிரச்சினைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

சாப்பிடும் உணவு வகைகளுக்கும், ரத்த அழுத்தத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது. ஒருசிலவகை உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது ரத்த அழுத்த பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள வழிவகை செய்யும்.


இன்றைக்கு ஆங்காங்கே பீட்சா கடைகள் முளைத்துள்ளன. இதை போகிற போக்கில் சாப்பிட்டு விட்டு போகின்றனர் இளைய தலைமுறையினர். இதனால் உடல்நலனுக்கு பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன.

மேலும் இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பீட்ஸா, பர்கர், போன்றவற்றை சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

ரத்த அழுத்தம்

நிறைய பேர் பீட்சாவை விரும்பி சாப்பிடுகிறார்கள். அதில் சோடியம் அதிகமாக சேர்க்கப்படுகிறது. அதில் தக்காளி சாஸும் அதிகம் சேர்க்கப்படுகிறது. அதுவும் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்த காரணமாகிவிடும்.

புற்றுநோய்

மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக உடற்பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய் என பல்வேறு நோய்கள் வருவதற்கு அடிப்படை காரணம் தவறான உணவுப் பழக்கமே என்கிறார்கள் மருத்துவர்கள்.

தைராய்டு பிரச்னை

பீட்சா பாக்கெட்டில் உருகாமல் இருக்க சில கெமிக்கல்ஸ் பயன்படுத்துகின்றனர். இந்த கெமிக்கல் தைராய்டு பிரச்னையை ஏற்படுத்துகிறது.

செரிமானம் சார்ந்த நோய்

பீட்சா பல மணிநேரத்துக்குப் பசியை நிச்சயமாக அடக்கும் , அடுத்த வேளைக்கான பசி உணர்வையும் சேர்த்து அடக்கி, செரிமானம் சார்ந்த நோய்களை உண்டாக்கும். பசியை அடக்குவதோடு சேர்த்து மலத்தையும் அடக்கும். மலத்தை இளக்கும் வகையிலான உணவுகளை சாப்பிடப் பழகிவிட்ட நமக்கு, மலத்தை குடலிலேயே கட்டிப்போடும் பீட்சா, நமக்கு தீய உணவுதானே..

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags