இதுதொடர்பாகத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் அவர்களது ஒரு முறைப் பதிவு மற்றும் நிரந்தரப் பதிவில், தங்கள் ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை தங்களது ஆதார் எண்ணைப் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள், விரைவில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இனி வரும் காலங்களில் நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யும் முன் ஆதார் எண்ணைப் பதிவு செய்தால் மட்டுமே ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்ய முடியும். தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஜன.3 ஆம் தேதி நடக்க உள்ள குரூப் -1 முதல் நிலைத் தேர்வு, ஜன.9, 10 ஆம் தேதி நடக்க உள்ள உதவி இயக்குனர் ( தொழில், வணிகத் துறை) பதவிக்கான தேர்வு ஆகியவற்றுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை ஆதார் எண்ணை உள்ளிட்டே பதிவிறக்கம் செய்ய முடியும்.
கூடுதல் விவரங்களுக்கு: 1800 425 1002,
இ-மெயில்: contacttnpsc@gmail.com ஆகியவை மூலம் தொடர்பு கொள்ளலாம்’’.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.