பொருள் :
பள்ளிக்கல்வி - தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் 6029 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டது - ஆய்வக உபகரணங்கள் களவு போனது மற்றும் சேதம் அடைந்தது - பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திட அறிவுரைகள் வழங்குதல் - சார்பு

பார்வை :
1. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் இதே எண் நாள் :14.10.2019
2. L&T நிறுவன திட்ட மேலாளரின் கடிதம் எண்: LNT/SW&C/HI-TECH LAB/O&M/003, Dated: 01.12.2020
பார்வை-1ற் காண் செயல்முறைகளுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் 6029 அரசுப் பள்ளிகளுக்கான உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் L&T நிறுவனத்தால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சில பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களின் உபகரணங்கள் களவு போனதாகவும், சில உபகரணங்கள் உயர் மின் அழுத்தத்தால் சேதமடைந்துள்ளதாகவும் பார்வை-2ல் காணும் கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காண் பொருள் சார்ந்து பார்வை-1ல் காணும் செயல்முறைகள் வாயிலாக ஏற்கனவே அறிவுரைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் உபகரணங்கள் களவு போனது மற்றும் உயர் மின் அழுத்தத்தால் சேதமடைந்தது போன்ற நிகழ்வுகள் நடந்தது வருத்தத்திற்குரியது.
மேலும் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திட தலைமையாசிரியர் ஒரு குழு அமைத்து (கணினி ஆசிரியர் உட்பட), அக்குழுவானது உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல் வேண்டும்.
உயர்தொழில்நுட்ப ஆய்வக அறையானது பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
உயர்தொழில் நுட்ப ஆய்வகத்தை கையாளும் போதும் , அது நிறைவடையும் போதும், ஆசிரியர்கள் ஒரு Login Register ல் பதிவு செய்யும் வகையில் பதிவேடு ஒன்று பேணப்பட வேண்டும். ஆய்வக அறையில் மின்சார இணைப்புகள் உறுதியாக உள்ளனவா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
மின் கசிவு போன்ற நிகழ்வுகளால் ஆய்வகம் சேதமாகாமல் தடுத்திட அவ்வப்போது மின் இணைப்புகளை உரிய பணியாளரைக் கொண்டு சரிபார்த்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
தேவைப்படும் இடங்களில் கிரில் கேட் அமைத்திட தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களின் முக்கியத்துவத்தினை உணர்ந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைத்திட சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறை வழங்குமாறும், ஒரு மாத காலத்திற்க்குள் அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு ஏற்பாட்டினை அமைத்து அதன் விவரத்தினை அனுப்புமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.