உயிருக்கு உலை வைக்கும் நொறுக்குத் தீனிகள்.
கொழுப்பு சத்துள்ள உணவுப்பொருட்கள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி செய்வது கல்லீரல்தான். பொதுவாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை செரிக்காமல் ஆங்காங்கே படிந்து ரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சென்றடைந்து விடும். கொழுப்பை கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது கரைத்து விடுகிறது. நமது உயிரை பாதுகாக்கும் முக்கிய உறுப்பான கல்லீரலை கடுமையாக பதம் பார்ப்பது நொறுக்குத் தீனிகள்தான்.
குறிப்பாக பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், பீஸா மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றில் உணவுப்பொருள் கெடாமல் இருக்க சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அவை 100 சதவீதம் கல்லீரலை குறிவைத்து தாக்குகிறது.
நொறுக்குத்தீனிகளில் உள்ள நச்சுப்பொருட்களை முதலில் கல்லீரல் சுத்திகரிக்கிறது. எஞ்சியவற்றை சிறுநீரகம் சுத்திகரிக்கிறது.
நொறுக்குத் தீனிகளை ஒரு குழந்தை அடிக்கடி சாப்பிட்டால் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படும். தற்போது கடைகளில் ரெடிமேடு சப்பாத்தி, புரோட்டா போன்றவை விற்கப்படுகின்றன. சப்பாத்தி கெடாமல் இருக்க ஒருவகை ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இது போன்ற அரை வேக்காட்டு ரெடிமேடு சப்பாத்திகளை வாங்கி நாம் சாப்பிட்டால் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்படும்.
பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனிகளை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. வீட்டில் தயாரித்த உணவுகளை கொடுப்பது நல்லது. உணவில் காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் ஏதாவது சில பழங்களை உண்ணலாம்.
குழம்பு போன்றவற்றை சமைத்த அன்று மட்டும்தான் சாப்பிட வேண்டும், அதை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடக் கூடாது. ரசாயன குளிர்பானங்களை அருந்த கூடாது. கல்லீரல் நோயாளிகள் அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.