1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மதிப்பீட்டில் திருப்தி இல்லையெனில் தேர்வெழுதலாம்: சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மதிப்பீட்டில் திருப்தி இல்லையெனில் தேர்வெழுதலாம்: செயலர்


சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு வரையறையில் திருப்தி இல்லை என்றால், கோவிட்டிற்குப் பிறகு தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ செயலாளர் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 வைரஸ் 2வது அலை காரணமாக, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் தேர்ச்சி, மதிப்பெண் வழங்குவதற்கான மதிப்பீடு எவ்வாறு வரையறுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து 2 வாரங்களில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என கூறியிருந்தது.


latest tamil news




இதுகுறித்து சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: சிபிஎஸ்இ மதிப்பீடு வரையறை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்னும் 2 வாரத்திற்குள் தயாராகிவிடும். மாணவர்களுக்கு மதிப்பீடு வரையறையில் திருப்தி இல்லை என்றால், கோவிட்டிற்குப் பிறகு தேர்வு நடத்தப்படும். முடிவு வெளியிடப்படும்போது மாணவர்கள் எந்தவிதமான இடையூறையும் சந்திக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க உறுதியாக உள்ளோம். உயர்படிப்புக்கான அட்மிஷன் துவங்குவற்கு முன் அவர்கள் தேர்வு முடிவை பெறுவார்கள் என்ற உறுதியை மாணவர்களுக்கு அளிக்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags