தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்த தேர்வுகள் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கும் என்றும் கூறியிருந்தார். கொரோனாவின் தாக்கல் நாளுக்கு நாள் வீரியம் அடைந்து வருகிறது. இதனிடையே, ஏப்ரல்10-ம் தேதிக்குள் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வராவிட்டால், புதிய திட்டத்தை செயல்படுத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகின. அதில், மாநில அளவிலான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து விட்டு மாவட்ட அளவிலான தேர்வை நடத்தலாமா அல்லது காலாண்டு, அரையாண்டு முடிவுகளின் படி தேர்ச்சி அறிவிப்பை வெளியிடலாமா என ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில்;- 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். 21 நாட்களுக்கு பிறகு நோயின் தீவிரத்தை பார்த்த பிறகே பள்ளித் தேர்வுகள் குறித்து ஆலோசிக்க முடிவு எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.