ஜேஇஇ மெயின் தேர்வுக்கு 10 லட்சம் முகக்கவசங்கள், 10 லட்சம் ஜோடி கையுறைகள் மற்றும் சுமார் 6,600 லிட்டர் சானிடைசர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று மத்திய அரசு ஒருபக்கம் கூறி வரும் நிலையில், மறுபக்கம் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறையாததால் மாணவர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்று கூறி தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தேர்வுகளை நடத்துவதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மாணவர்களுக்கு பாதுகாப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
ஜேஇஇ மெயின் 2020 தேர்வுக்கு சுமார் 8.58 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதையடுத்து தேர்வு மையங்களில் சானிடைசர், முகக்கவசம், வெப்பநிலை அளவிடும் கருவி என அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் தயாராக இருக்கும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மொத்தமாக ஜேஇஇ மெயின் தேர்வுக்கு சுமார் 10 லட்சம் முகக்கவசங்கள், 10 லட்சம் ஜோடி கையுறைகள் மற்றும் சுமார் 6,600 லிட்டர் சானிடைசர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சிறப்பு மருத்துவக்குழு, மாவட்டவாரியாக தேர்வுகளை கண்காணிக்கும் அதிகாரிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய குழு என அனைத்தும் தயாராக உள்ளது என்று கூறியுள்ளது.
தேர்வுக்கு முன்னும் பின்னும் தேர்வு மையங்கள் முழுமையாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என்று தேர்வு முகமை கூறியுள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.