வடமதுரை அருகே பள்ளி மாணவர் உருவாக்கிய செயலிக்கு 'கூகுள்' நிறுவனம் அங்கீகாரம் வழங்கி 'பிளே ஸ்டோரில்' சேர்த்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி நாகலட்சுமி. வடமதுரை மம்மானியூர் அரசு பள்ளி ஆசிரியர். இவர்களின் மகன் எம்.என்.பிரனேஷ் 13. திண்டுக்கல் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார்.
ஐந்தாம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் கல்வியையும் கற்று வரும் இவர் 'ஜெட் லைவ் சாட்' (jet live chat) என்ற செயலியை உருவாக்கி கூகுளில் சேர்க்க விண்ணப்பித்தார். செயலியை பரிசீலித்த கூகுள் பல கட்ட ஆய்விற்கு பின் அங்கீகரித்து பிளே ஸ்டோரில் சேர்த்துள்ளது.
28 ஆண்டுகள் ஒப்பந்தம்
தற்போது எரியோட்டில் வசிக்கும் மாணவர் கூறியதாவது: இரு வார முயற்சியில் இந்த செயலியை உருவாக்கினேன். இந்த செயலியின் சிறப்பு அம்சமாக ஆடியோ, வீடியோ போன் அழைப்புகளை மேற்கொள்ளலாம். அதிகளவு எம்.பி., கொண்ட பைல்களையும் அனுப்பலாம். உதாரணமாக ஒரு முழு திரைப்படத்தையே அனுப்ப முடியும்.
முகநுாலில் 'லைக்' பதிவிடுவது போல இந்த செயலியில் அனுப்பப்படும் தகவல்களின் மீது 1000க்கும் மேற்பட்ட குறியீடுகளை கொண்டு கருத்து பதிவிடும் வாய்ப்பும் உள்ளது. எனது செயலிக்கு 2048 ஆண்டு வரை கூகுள் ஒப்பந்தம் செய்து தந்துள்ளது. 2018-ம் ஆண்டு பிந்தைய மாடல் வெர்ஷன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். அதற்கு முந்தைய மாடல் போன்களில் 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும் 'என்றார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.