ஓட்ஸ் சாப்பிடலாமா? வேண்டாமா?
ஓட்ஸ் ஆஸ்திரேலியாவில் மட்டுமே சாப்பிட வேண்டும்!!!? மற்ற நாடுகளில் சாப்பிட வேண்டிய அவசியமில்லை.
முதலில் ஓட்ஸ் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஓட்ஸ் என்பது ஆஸ்திரேலியாவிலும் ஐரோப்பாவில் சில ஊர்களில் விலையும் ஒரு வகை அரியை இயந்திரத்தில் அமுக்கி தட்டையாக மாற்றப்பட்ட ஒரு உணவு.
உங்களுக்கு எளிமையாக புரிய வேண்டுமென்றால் ஆஸ்திரேலியன் அவல்.
நமது ஊரில் அரிசியை தட்டையாக மாற்றினால் அவல் என்று பெயர். அதேபோல் ஆஸ்திரேலியாவில் அரிசியை தட்டையாக மாற்றினால் ஓட்ஸ்.
நமது பாரம்பரிய அரிசி அவலில் உள்ள சத்தைவிட ஓட்ஸில் அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை.
எனவே குறைந்த விலையில் கிடைக்கும் நமது ஊரின் அவல் சாப்பிடாமல் ஓட்ஸ் சாப்பிடுவது நகைச்சுவையாக இருக்கிறது.
வியாபாரிகள், உலகம் முழுவதும் ஓட்ஸை விற்று அதிக லாபம் சம்பாதிப்பதற்காக, ஓட்ஸ் நல்லது, ஓட்ஸ் சர்க்கரை நோயை குணப்படுத்தும், ஓட்ஸ் உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் கேன்சரை குணப்படுத்தும் என்று கூறி விற்று வருகிறார்கள். அதற்காக ஓட்ஸ் சாப்பிடுவது தவறு என்று நான் கூறவில்லை. ஆனால் தேவை இல்லை என்று கூறுகிறேன்.
ஒருவேளை நாம் நம் நாட்டு அரிசி அவலை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுசென்று , அந்த நாட்டு மக்களிடம் அவல் நல்லது, அவல் சர்க்கரை வியாதியை குணப்படுத்தும், அவல் உடல் எடையை குறைக்கும் என்று ஆஸ்திரேலியாவில் விற்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த ஓட்ஸை ஆஸ்திரேலியா மக்களும் ஐரோப்பாவில் பல ஊர்களிலும் அப்படி ஒன்றும் பெரிதாக விரும்பி சாப்பிடுவதில்லை. எனவேதான் மற்ற நாடுகளில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே அதிக விலைக்கு ஓட்ஸ் என்ற வெளிநாட்டுப் பொருளை வாங்கி சாப்பிடும் நண்பர்கள் இனிமேல் அதற்கு பதிலாக நம் நாட்டு அவலை சாப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாற்றங்கால் முறையில் பயிரிடப்பட்ட, பாரம்பரிய அரிசியை, செயற்கை உரங்கள் பயன்படுத்தாமல் விளைய வைத்து, கைவேக்காடு முறையில் பக்குவம் செய்து, பாலீஸ் செய்யாமல், அவலாக மாற்றி சாப்பிட்டால் ஓட்ஸை விட ஆயிரம் மடங்கு சக்தி அதிகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.