ராசிக்கு நான்கில் இருக்கும் ராகு 3ல் மாறுகிறார். அசாத்திய தைரியம் உண்டாகும். பிடிவாத குணத்துடன் செயல்பட்டாலும், முக்கிய முடிவுகளை எடுத்து சாதனை புரிவீர்கள். இக்கட்டான நேரத்தில் கூட உங்கள் நடவடிக்கை வெற்றியில் முடியும். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். ஆபத்து காலத்தில் நண்பர்களுக்கு உதவுவீர்கள். அவ்வப்போது தத்துவ சிந்தனை மனதில் பிறக்கும். பொதுநல சேவை, ஆன்மிகப் பணிகளில் முன்நிற்பீர்கள். எதிரிகள் உங்களோடு மோதி பலம் இழப்பர். கடன் பிரச்னை குறையும். மொத்தத்தில் இந்த பெயர்ச்சியால் நன்மை அதிகரிக்கும்.
குடும்பம்: ராகு 3ல் அமர்வதால் சகோதரி வீட்டுப் பிரச்னையை தீர்க்க உதவுவீர்கள். பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தந்தையின் உடல்நலனில் அக்கறை தேவை. தாயார்வழி உறவினர்களோடு இருந்த பிரச்னை மறையும். தந்தைவழி உறவினர் உங்களிடம் உதவி கேட்டு வருவர்.
தொழில்: தொழிலதிபர்கள் தொழிலாளர்களுடன் நிதான அணுகுமுறையை பின்பற்றுவது நல்லது. ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர். காவல், தடயவியல் துறையினர் சாதனை படைப்பர். உங்களின் இயற்கை குணமான நீதி, நேர்மையால் சுற்றியுள்ளவர்களால் பிரச்னை ஏற்படலாம். கேது 9ம் இடத்திற்கு வரவிருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு வாய்ப்பு தேடி வரும். சிலர் பணி காரணமாக குடும்பத்தை பிரியும் நிலை வரும். அரசுப் பணியாளர்கள் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திப்பர்.
நிதி நிலை : பூர்வீக சொத்தில் இழப்பு ஏற்படலாம். ஆனால் சுயவருமானத்தால் சொத்து சேரும். குரு, சனிப்பெயர்ச்சியால் நிதிநிலை உயரும். பிள்ளைகளின் நலனுக்காக சேமிப்பில் ஈடுபடுவீர்கள்.
மாணவர்கள்: ராகுவால் ஆற்றல் அதிகரிக்கும். ஞாபக மறதியை போக்க பயிற்சி தேவை. இயற்பியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறையினர் நல்ல முன்னேற்றம் காண்பர்.
பெண்கள் : வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். குடும்ப பிரச்னையை வெளியே சொல்வதால் மதிப்பு குறையும். சகோதரவழியில் பிரச்னை தோன்றலாம். புகுந்த வீட்டு பிரச்னைக்கு கணவரோடு இணைந்து செயல்பட்டால் தீர்வு கிடைக்கும்.
உடல்நலம்: காது, கழுத்து, தோள்பட்டையில் சிறுபிரச்னைகள் ஏற்படலாம். சிலர் காது, மூக்கு, தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ய நேரலாம். குருவின் பார்வை ராகு மீது விழுவதால் பிரச்னை குறையும்.
பரிகாரம்:
* தினமும் வராஹியம்மனை வழிபடுதல்
* வெள்ளியன்று அபிராமிஅந்தாதி படித்தல்
* ஏழைகளுக்கு அன்னம், ஆடை தானம்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.