1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-கடகம்

 

செப். 1 முதல் ராகு கேதுப் பெயர்ச்சியால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 11ம் இடத்தில் ராகுவும், 5ம் இடத்தில் கேதுவும் அமர உள்ளனர்.  கேது வீண் சிந்தனை, மனக்குழப்பத்தை ஏற்படுத்துவார். என்றாலும் அக்டோபரில் வரும் குருபெயர்ச்சியால் ஆன்மிக சிந்தனை வளரும். ராகு அசாத்தியமான வெற்றியை தருவார். நினைத்ததை செயல்படுத்துவதில் வேகம் காட்டுவீர்கள். முக்கியமான பிரச்னைகளில் மாற்றுமதத்தினரால் தீர்வு காண்பீர்கள். மறைமுக எதிரி காணாமல் போவர்.  நிலுவையில் உள்ள வழக்குப் பிரச்னை முடிவுக்கு வரும். கேதுவால் தடுமாற்றம் ஏற்பட்டாலும், ராகுவால் வெற்றி காண்பீர்கள். மொத்தத்தில் இந்த ஒன்றரை ஆண்டு காலமும் சுகமான அமையும்.

குடும்பம்: பிள்ளைகள் மீது அக்கறை காட்டுவது நல்லது. உங்களது ஆலோசனை, அரவணைப்பு அவர்களுக்குத் தேவைப்படும்.  தம்பதியருக்குள் அன்பு கூடும். உறவினர்களால் உதவி கிட்டும். பெற்றோருடன் இருந்த மனக்குறை தீரும். தம்பதியராக இணைந்து செய்யும் செயல்கள் வெற்றி பெறும்.

தொழில்: ராகுவால் பிரபலம் மிக்க மனிதராக திகழ்வீர்கள்.  உயர் பதவியில் உள்ளோருடன் தொடர்பு ஏற்படும். அயல்நாட்டுப் பிரயாணத்திற்கான வாய்ப்புண்டு. வியாபாரத்தில் நவீன உத்தி மூலம் லாபம் காண்பீர்கள். சிறிய முதலீடு கொண்ட பெட்டிக்கடை, குடிசைத்தொழில், தின்பண்டங்கள் விற்பனை வருவோர் பெருத்த முன்னேற்றம் காண்பர். பணியாளர்கள் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவர். வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி தொழில், சமையல் கலைஞர்கள், மருத்துவத் துறையினர், நீதித்துறையினர், ஆசிரியர் ஆகியோர் வளர்ச்சி காண்பர்.

நிதி நிலை : ராகுவால் அமோக லாபம் காண்பீர்கள். சேமிப்பு உயரும். அசையாச் சொத்து சேரும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை மறையும். பாகப்பிரிவினையில் சாதக பலன் கிடைக்கும். கடன் சுமை எதிர்பாராத வகையில் மறையும். நிலுவைத் தொகை வசூலாகும்.

பெண்கள்: நாவடக்கம் அவசியம் தேவை. அவசரப்பட்டு பேசும் வார்த்தை அவப்பெயரை உண்டாக்கலாம். பிறந்த வீட்டாருக்கு உதவ வேண்டிய சூழல் உருவாகும். புத்ர பாக்யம் இல்லாதவர்களுக்கு பிள்ளைவரம் கிடைக்கும்.

மாணவர்கள்: திறமையை வெளிப்படுத்தும் நேரம் இது. ஞாபகசக்தியின் துணையால் வெற்றி காண்பீர்கள். ஆய்வு மாணவர்கள் ராகுவால் மேன்மை பெறுவர். மருத்துவம், விவசாயத் துறையினர் சாதனை படைப்பர்.

உடல்நிலை: டென்ஷனால் உடல்நிலை பாதிக்கலாம். கவனக்குறைவால் எலும்பு முறிவு, எலும்பு மஜ்ஜைகளில் பிரச்னை, மூட்டு தொந்தரவால் அவதிப்படலாம். வாகன பயணத்தில் எச்சரிக்கை தேவை.

பரிகாரம்:
* பவுர்ணமியன்று சிவன் கோயில் வழிபாடு
* தினமும் தேவாரம், திருவாசகம் படித்தல்
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் தரிசனம்
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags