கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, இலவச எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கான 'ஆன்லைன்' பதிவு, நேற்று துவங்கியது.
பதிவு செய்ய, செப்., 25 வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கு, ஆண்டுக்கு, 2 லட்ச ரூபாய்க்குள் வருமானம் இருக்க வேண்டும்.
இதற்கான சான்றிதழை, பெற்றோர் தாக்கல் செய்ய வேண்டும். அவர்களுக்கு கல்விக் கட்டணத்தை, தனியார் பள்ளிகளுக்கு அரசே வழங்கும்.இந்த ஆண்டுக்கான இலவச மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. https://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில், செப்., 25 வரை பெற்றோர் பதிவு செய்யலாம்.தமிழகம் முழுதும் மாவட்ட வாரியாக பள்ளிகள் பட்டியலிடப்பட்டு, பெயர்கள், வகுப்பு மற்றும் காலிஇடங்களின் விபரம் குறிப்பிடப்பட்டுள்ளன.மாணவர்களின் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், ஆதார், ரேஷன் அட்டை, வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் மற்றும் சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ் ஆகியவற்றை, தயாராக வைத்திருந்து பதிவு செய்ய வேண்டும் என, மெட்ரிக் இயக்குனரகம் அறிவித்துள்ளது. சேவை மையங்கள் அமைப்பு இலவச மாணவர் சேர்க்கைக்கு பதிவு செய்வதற்கு, மாவட்ட கல்வி அலுவலகங்களில், சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி , வட்டார கல்வி அலுவலகம், வட்டார கல்வி மண்டல மையம் ஆகியவற்றில், சேவை மையங்கள் செயல்படுகின்றன.சென்னையில், எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம், வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கல்வி அலுவலகங்கள், சைதாப்பேட்டையில் உள்ள மேற்கு கல்வி மாவட்ட அலுவலகம், சூளைமேட்டில் உள்ள கிழக்கு கல்வி மாவட்ட அலுவலகங்களில், பெற்றோர் நேரடியாக சென்று, இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.