மக்களுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பம் வளர வளர, மோசடிகளும் நாள்தோறும் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஓடிபி மோசடி குறித்து விருதுநகர் காவல்துறை தரப்பில் பொதுமக்களுக்கு ஒரு அறிவுறுத்தல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, ஓடிபி மோசடி என்று இதனை குறிப்பிடும் காவல்துறை, ஏமாற்றுக்காரர்கள், தொலைபேசி வாயிலாக ஒருவரை தொடர்பு கொண்டு, மற்றவர் எண்ணுக்கு அனுப்ப வேண்டிய வெரிஃபிகேஷன் கோட் எண்ணை உங்களுக்கு தவறுதலாக அனுப்பிவிட்டேன்.
மறுபடியும் அந்த ஓடிபி எண்ணை எனக்கு திருப்பி அனுப்புங்கள் என்று கூறினால், நீங்கள் அதை திரும்ப அனுப்ப வேண்டாம்.அவ்வாறு அனுப்பும்பட்சத்தில், செல்லிடப்பேசி எண் ஊடுருவப்பட்டு, வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடுப்போகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, ஒடிபி எண்ணை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கிக் கடன் அட்டையின் பண மதிப்பை உயர்த்துவதற்காக ஓடிபி எண்ணை சொல்லுங்கள், உங்கள் வங்கிக் கணக்கின் ஏடிஎம் அட்டையை மேம்படுத்த ஓடிபி எண் அனுப்பப்பட்டிருக்கிறது, அதை சொல்லுங்கள் என்றெல்லாம் ஓடிபி எண்களை மோசடியாளர்கள் பெற்று பணத்தை கொள்ளையடித்து வந்தனர்.
தற்போது புதிய முறையில் ஓடிபியை பெற மோசடிக் கும்பல் திட்டமிட்டுள்ளது. இது குறித்து விருதுநகர் காவல்துறையினர் பொதுமக்களுக்கு மேற்கண்ட எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.