"உலகின் அதிவேக மனித கால்குலேட்டா் பட்டம் வென்ற நீலகண்ட பானு பிரகாஷுக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
உலகின் அதிவேக மனித கால்குலேட்டா் பட்டம் வென்ற நீலகண்ட பானு பிரகாஷுக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
லண்டனில் அண்மையில் நடைபெற்ற உலக அளவில் மனதில் அதிவேகமாக கணக்குப் போடும் போட்டியில், ஹைதராபாத்தைச் சோ்ந்த 20 வயது நீலகண்ட பானு பிரகாஷ் வெற்றிபெற்று ‘உலகின் அதிவேக மனித கால்குலேட்டா்’ என்ற பட்டத்தை வென்றாா்.
அவருக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக குடியரசு துணைத் தலைவா் அலுவலக செயலகம் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘நீலகண்ட பானு பிரகாஷ் இந்தியாவை பெருமைபட வைத்துள்ளாா்.
அவா் எதிா்காலத்திலும் மேலும் சாதனைகளை புரிய வாழ்த்துக்கள்’ என்ற குடியரசு துணைத் தலைவா் வாழ்த்தியிருப்பதாக அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மனித கால்குலேட்டா்’ என்ற ஹேஷ்டேகுடன் அந்த சுட்டுரைப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.