கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வைரஸ் பரவல் கட்டுக்குள் வராத நிலையிலும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் படிப்படியாக தளர்வுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, தற்போது அமலில் உள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் வரும் 31 ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கின் 4- ஆம் கட்ட தளர்வுகள் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு இன்றோடு 158 நாட்கள் ஆவதால், தளர்வுகளை மக்கள் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர். அன்லாக் 4.0 -வில் என்னென்ன தளர்வுகள் இருக்க வாய்ப்புள்ளது என்பதை பற்றி கீழ் காண்போம்.
- மெட்ரோ ரெயில் சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வாய்ப்பு உள்ளது. மார்ச் 22 ஆம் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை நாடு முழுவதும் முடக்கப்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளான பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது, முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் போன்ற விதிகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படலாம்.
- பள்ளி, கல்லூரிகள் செயல்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
- பார்கள் திறக்க அனுமதி அளிக்கப்படலாம். ஆனால், அமர அனுமதி இருக்காது என்று சொல்லப்படுகிறது
- சமூக இடைவெளியை பின்பற்றுவது கடினம் என்பதால் திரையரங்குகளை திறக்க அனுமதி இருக்காது எனக்கூறப்படுகிறது
- மும்பையில் புறநகர் ரெயில் சேவைக்கு அனுமதி இருக்க வாய்ப்பில்லை.
- சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமானங்கள் கொல்கத்தா வர விதிக்கப்பட்ட தடையை மேற்கு வங்காள அரசு செப்டம்பர் 1 ஆம் தேதி தளர்த்த உள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் விமான சேவையை துவங்க மம்தா பானர்ஜி அனுமதி கொடுத்துள்ளார்
இதுபோன்ற தளர்வுகள் இருக்கலாம் என மக்கள் எதிர்பார்த்து உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் ஊரடங்கின் 4 ஆம் கட்ட தளர்வுகள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.